ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் அரசு பள்ளி மாணவ மாணவிகள் மனு
பள்ளி கட்டிடத்தை சரி செய்து தரக்கோரி பாட்டுப்பாடி, ஆட்டம் ஆடி ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள்.
ராமநாதபுரத்தை அடுத்த வித்தானூர் பகுதியில் அரசு துவக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த அரசு பள்ளிக்கு சரியான கட்டிட வசதி இல்லாததால் மகளிர்மன்ற கட்டிடத்தில் மாணவ மாணவிகளுக்கு பாடம் எடுக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி பாதிக்கப்பட்ட கிராம பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது பள்ளிப் பாடத்தின் பாடலை பாட்டுப்பாடி ஆட்டம் போட்டு மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இது தொடர்பாக, பெற்றோர் பேசுகையில் சமீபத்தில் பராமரிக்கப்படாத கழிவு நீர் தொட்டியில் விழுந்து சில தினங்களுக்கு முன்பு நான்கு வயது சிறுமி பலியானதை போல இங்கு போதிய கழிவறை கட்டிட வசதி குடிநீர் என எந்த அடிப்படை வசதியும் இல்லாததால், தெரு நாய்கள் மற்றும் விஷ ஜந்துக்களினால் உயிர் அச்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கே அச்சத்துடன் இருந்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கும் குழந்தைகளின் பெற்றோர் இதனை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தனர்.