ராமநாதபுரம் பெண்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் எஸ் டி பி ஐ கட்சியின் பெண்கள் அமைப்பான விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பாலியல் அத்துமீறல்களை கண்டித்தும் , பெண்களுக்கு எதிராக அரங்கேறி வரும் கொடுமைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விம் மாவட்ட தலைவி ரம்ஜான் பேகம் தலைமை தாங்கினார். விம் நகர் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அரசுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியலை கண்டித்து தொகுதி தலைவர் பீர் முகைதீன் கண்டன கோஷம் எழுப்பினார். மாநில மீன அணி தலைவர செய்யது இயறாகிம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் விம் நகர் தலைவர் பாத்திமா கனி மாவட்ட பொதுச்செயலாளர் சித்தி மாவட்ட பொருளாளர் பார்த்திமா விம் மாவட்ட நிர்வாகிகள் நகர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெண்கள் திரளாக கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்தனர்.