ராமநாதபுரம் மீனவ பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தினர்
பாம்பன் பகுதி 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்
ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்காக பாம்பன் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 5000க்கும் மேற்பட்ட மீனவ பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். தங்களது குடியிருப்பு பகுதிகளை கையகப்படுத்த நெடுஞ்சாலை துறை அளவீடு செய்து வருவதாகவும் இவ்வாறு செய்வதால் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தெற்குவாடி, தோப்புக்காடு, கே கே நகர், சின்னப்பாலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 5000க்கும் மேற்பட்ட மீனவ பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் அவர்களது குடியிருப்பு பகுதி அழிந்து போகும் என்பதாலும், தங்களது வாழ்வாதாரமே அழிந்து விடும் என்பதாலும் பாம்பன் தெற்குவாடி, தோப்புக்காடு, கேகே நகர் , சின்னப்பாலம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் மீனவர் பெண்களும் 500க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளை தங்களது கைகளில் ஏந்தியவாறு இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.