ராமநாதபுரம்மரைக்காயர் பட்டினம் ஊராட்சியை பேரூராட்சியோடு இணைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

மரைக்காயர் பட்டினம் ஊராட்சியை மண்டபம் பேரூராட்சியோடு இணைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

Update: 2025-01-07 04:14 GMT
ராமநாதபுரம் மாவட்டம் மரைக்காயர் பட்டினம் ஊராட்சியை மண்டபம் பேரூராட்சியோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறுக்காயர் பட்டணம் கிராம மக்கள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் . கிராம மக்கள் தெரிவிக்கையில் . மரைக்காயர் பட்டினம் ஊராட்சியில் வசிக்கக் கூடியவர்கள் கடல் தொழில் மற்றும்100 நாள் வேலை நம்பி வாழ்கின்றனர் எங்கள் ஊரை பேரூராட்சி உடன் இணைத்தால் எங்களுக்கு சொத்து வரி பத்திரப்பதிவு கட்டணம் வீட்டு வரி புதிய வீட்டுக்கான கட்டுமான கூடுதல் வரி உட்பட அனைத்தும் கூடுதலாக இருக்கும் இதனால் நடுத்தரமாக வாழக்கூடிய மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் எங்கள் ஊரிலிருந்து மண்டபத்திற்கு சுமார் ஐந்து கிலோ மீட்டர் செல்ல வேண்டி உள்ளது என்றும் எங்கள் ஊருக்கு தேவைகளான தெருவிளக்கு குடிநீர் குப்பை பிரச்சனை உட்பட அடிப்படைத் தேவைகளை கூட எங்களால் கேட்க முடியாத சூழல் ஏற்படும் என்றும் நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம் எங்கள் கிராமத்தை சிறப்பு ஊராட்சியாக தரம் உயர்த்திட வேண்டும் என்றும் அரசுக்கு நாங்கள் கோரிக்கை வைக்கிறோம் என்று தெரிவித்தனர்.

Similar News