ராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மறியலில் ஈடுபட்டனர்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையினர் புதிய ஜிபிஎஸ் திட்டத்தை கைவிட க்கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2025-01-07 08:17 GMT
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை சங்கத்தின் சார்பில் புதிய ஜி. பி. எஸ். திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை ஏன் இதுவரை நிறைவேற்ற முடியவில்லை என்றும் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை நிறைவேற்ற கோரி சொன்ன வாக்குறுதியை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி பிறகு ராமேஸ்வரம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர் இதனால் நாள் சுமார் கால் மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மறியல் செய்த ஊரக வளர்ச்சித் துறையினரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மகா ஹாலில் அடைத்தனர்.

Similar News