ராமநாதபுரம் பள்ளியில் மாணவ மாணவிகள் பொங்கல் வைத்துக் கொண்டாடினர்

அமிர்தா வித்யாலயம் பள்ளியில் தமிழரின் பெருவிழாவினைப் போற்றும் விதமாக பொங்கல் பண்டிகை கோலாகலமாக நடைபெற்றது

Update: 2025-01-08 05:04 GMT
ராமநாதபுரம் அமிர்தா வித்யாலயம் பள்ளியில் தமிழரின் பெருவிழாவினைப் போற்றும் விதமாக பொங்கல் பண்டிகை கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினை பள்ளி மேலாளர் பிரம்மச்சாரிணி லட்சுமி அம்மா அவர்கள் வழிநடத்த பள்ளி முதல்வர் கோகிலா மற்றும் பள்ளி துணை முதல்வர் பாலவேல் முருகன் மேற்பார்வையில் விழாவானது நடைபெற்றது. போகி பண்டிகை போற்றும் விதமாக பள்ளிகள் தோறும் தூய்மை செய்தும், சூரியனைப் போற்றும் விதமாக சூரியனுக்கு பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என மங்கல ஒலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உழவர்களுக்கு துணை நிற்கும் மாட்டினைச் சிறப்பிக்கும் வகையில் காளைகளைக் குளிப்பாட்டி பொட்டு வைத்து பொங்கல் ஊட்டி சிறப்பித்தனர். காணும் பொங்கல் கொண்டாடும் வகையில் பல வகைப்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக பட்டிமன்றம் மற்றும் பட்டம் விடுதல், உறியடித்தல், கோலப்போட்டி , கயிறு இழுத்தல் என பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மாணவர்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பித்தனர்.

Similar News