காவேரிப்பாக்கம் அருகே வேளாண் முன்னேற்ற குழுவினருக்கு பயிற்சி
வேளாண் முன்னேற்ற குழுவினருக்கு பயிற்சி
காவேரிப்பாக்கம் ஒன்றியம், பெரும்புலிப்பாக்கம் ஊராட்சியில், வட்டார வேளாண்மைத்துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், கிராம வேளாண் முன்னேற்ற குழுவினருக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி பிச்சாண்டி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஆத்மா திட்டத்தின் வட்டார தொழில்நுட்ப மேலாளர் முபேஷ் முருகன் வர வேற்றார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் கலந்து கொண்டு, விவசாயிகள் நடவு பணியின் போது, வயலின் ஓரத்தில் பயிறுகை பயிர்கள் நடவு செய்வதன் மூலம் கூடு தல் வருமானம் கிடைக்கும். நெற் பயிரில் ஜிங் சல்பேட் இடுவ தன் மூலம் கூடுதல் மகசூலுடன், கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும், அரசால் வழங்கப்படும் மானியம் குறித்தும் விளக்கம் அளித்தார். இதில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் உதயகுமார். கிருஷ்ணராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.