காவேரிப்பாக்கம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சரி செய்ய கோரிக்கை

விழும நிலையில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி!

Update: 2025-01-09 05:01 GMT
காவேரிப்பாக்கம் ஒன்றியம் பன்னியூர் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டி தற்போது சேதம் அடைந்து காணப்படுகிறது. அதில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News