கிருஷ்ணாபுரம் பகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வு.
குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் 1-வது வார்டு கிருஷ்ணாபுரம் பகுதியில் பொங்கல் விழாவை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சை அரிசி சர்க்கரை கரும்பு அடங்கிய பொங்கல் தொகுப்பு 1-வது வார்டு கவுன்சிலர் சந்தியா ராபின்சன் தலைமையில் கூட்டுறவு சங்கத் தலைவர் முருகன் முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் தொகுப்பு வழங்கினர். அப்பொழுது திமுக வார்டு செயலாளர் ஜோதிராமலிங்கம், திமுக நிர்வாகிகள் மரகதம் பாண்டு, பழனி, தாமோதரன் கண்ணாயிரம், பூமிநாதன் மற்றும் நியாய விலை கடை விற்பனையாளர் முத்தமிழ்செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டு தமிழக அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.