தென்காசி மாவட்டம் குற்றால அருவி களில் இன்று விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் கூட்டம் மற்றும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இன்று அதிகாலை முதலே குற்றாலம் மெயின் அருவியில் புனித நீராடி குற்றால நாதர் கோவிலில் வழிபட்டனர். மேலும் ஐந்தருவி, பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் மிதமாக விழுவதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்றுடன் இதமான சூழ்நிலை நிலவியது.