ஜோலார்பேட்டை அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை!
ஜோலார்பேட்டை அருகே பொங்கலுக்கு துணி எடுத்து தரவில்லை என மனமுடைந்த மனைவி திருமணமான ஒன்பது மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பொங்கலுக்கு துணி எடுத்து தரவில்லை என மனமுடைந்த மனைவி திருமணமான ஒன்பது மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை! கணவன் விஷம் குடித்து அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் பகுதியைச் சேர்ந்த சாமன்னன் மகன் சந்தோஷ்(28) இவருக்கும் இவருடைய உறவு முறையான ஏழுமலை என்பவருடைய மகள் பவித்ரா (23) என்ற பெண்ணுக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது வாய் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பவித்ரா தனது கணவனான சந்தோஷிடம் பொங்கலுக்கு துணி எடுத்து வரலாம் என அழைத்ததாக கூறப்படுகிறது. இதனை கணவன் தட்டி கழித்ததாகவும் கூறப்பட்ட நிலையில் மனமுடைந்த மனைவி பவித்ரா வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ஒரு தனி அறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் இன்று காலை கதவு திறக்கப்படாத நிலையில் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன் வீட்டில் வைத்திருந்த விஷத்தை சாப்பிட்டு மயங்கி உள்ளார் இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் விரைந்து வந்த போலீசார் பவித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அதேபோல சந்தோஷ் மீட்டு முதல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பொங்கலுக்கு துணி எடுத்து தரவில்லை என்ற சிறிய பிரச்சனைக்காக திருமணமாக ஒன்பது மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.