கிருஷ்ணாராபுரம் அருகே பிள்ளப்பாளையம் பிடாரியம்மன் கோயில் வளாகத்தில், பணம் வைத்து சூதாடுவதாக லாலாபேட்டை போலீசாருக்கு வந்த தகவலின் படி, நேற்று முன் தினம் மாலை சம்பவ இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது, பிள்ளப்பாளையத்தை சேர்ந்த தனபால், 49, உதய குமார், 39, சந்தான கிருஷ்ணன், 45, ராஜசேகர், 43, திலிப், 29, அண்ணாதுரை, 40, ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.