ராமநாதபுரம் சாலை பாதுகாப்பு விழிப்புணர் பேரணி நடைபெற்றது
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது;
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாக பகுதியில் ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை ராமநாதபுரம் மாவட்ட நீதிபதி மெகபூப் அலி கான் கொடிய செய்து துவக்கி வைத்தார். பேரணியில் ராமநாதபுரம் மாவட்ட தொழில் பயிற்சி மாணவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இப்பேரணியில் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு குறித்து பதாய்களை ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியில் தலைக்கவசம் அணிய வேண்டும் பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணம் செய்யக்கூடாது வளைவுகளில் முந்தக்கூடாது சாலையோரம் செல்லும் பொழுது இடது புறமாக செல்ல வேண்டும் என மாணவர்கள் கோஷங்களை எழுப்பியும் பதாய்கள் ஏந்தியும் ஊர்வலமாக சென்றனர்... இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் வளாகப் பகுதியில் துவங்கி டி பிளாக், பாரதி நகர், குமரையா கோவில் வரை ஊர்வலமாக சென்றனர். இந்நிகழ்வில் நீதிபதிகள், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள், கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர்அவர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர், பொது மேலாளர் .இரவிக்குமார் காரைக்குடி மண்டலம், நாகராஜன் துணை மேலாளர் வணிகம் , தமிழ் மாறன் துணை மேலாளர் நிர்வாகம், சண்முகசுந்தரம் உதவி மேலாளர் தொழில்நுட்பம், பாலமுருகன் உதவி பொறியாளர் இயக்கம், கிளை மேலாளர்கள் தனபால் இராமநாதபுரம் புறநகர், ரத்தினம் இராமநாதபுரம் நகர், தேவேந்திரன் இராமேஸ்வரம், குமார வேலு பரமக்குடி, சிவகார்த்திகேயன் கமுதி, விஜயராஜ் முதுகுளத்தூர் மற்றும் ரவி தகுதிச் சான்று பிரிவு பொறியாளர், அண்ணாதுரை உதவிபொறியாளர் பயிற்சி மையம், ஆகியோர் கலந்து கொண்டனர்