சோளிங்கர் தக்கான் குளக்கரையில் 32 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு பூஜை...

ராணிப்பேட்டை மாவட்டம் அடுத்த சோளிங்கரில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு 64 ஆவது திவ்ய தேசமான சோளிங்கர் அருள்மிகு ஸ்ரீ யோக நரசிம்மர் திருக்கோவிலுக்கு சொந்தமான பிரம்ம தீர்த்தம் என்னும் தக்கான் குளக்கரையில் அமைந்துள்ள 32 உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து .;

Update: 2025-12-20 11:40 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் அடுத்த சோளிங்கரில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு 64 ஆவது திவ்ய தேசமான சோளிங்கர் அருள்மிகு ஸ்ரீ யோக நரசிம்மர் திருக்கோவிலுக்கு சொந்தமான பிரம்ம தீர்த்தம் என்னும் தக்கான் குளக்கரையில் அமைந்துள்ள 32 உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து மலர் மாலை பல வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனைகள் நடைபெற்றது. சோளிங்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பிரம்ம தீர்த்தம் என்னும் தக்கான் குளத்தில் புனித நீராடி ஆஞ்சநேயர் சுவாமிக்கு மிளகு வடை மாலை, துளசி மாலை, அணிவித்தும், நெய் தீபம் ஏற்றி வைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். பல்வேறு பக்த குழுவினர்கள் தரிசனம் செய்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

Similar News