கடவூர் ஒன்றிய பகுதிகளில் இளம்வயது திருமணத்தை தடுப்போம், வளர் இளம் பருவ கற்பத்தை தவிர்ப்போம்
விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது;
கடவூர் ஒன்றிய பகுதிகளில் இளம்வயது திருமணத்தை தடுப்போம், வளர் இளம் பருவ கற்பத்தை தவிர்ப்போம், குழந்தைகளுக்கான பாலியல் துன்புறுத்தல் போக்சோ சட்டம், வளர் இளம் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களும் ஆரோக்கியமும் என்ற தலைப்புகளில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது கரூர் மாவட்டம்,கடவூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள 20 ஊராட்சிகளில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தரகம்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு கடவூர் வட்டார மருத்துவ அலுவலர் பிரசன்னா தலைமை வகித்தார். கடவூர் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் பிரபாகரன், தரகம்பட்டி முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் வேதவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கடவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் முன்னால் சேர்மன் செல்வராஜ் கலந்து கொண்டு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார் இதில் 19 வயதிற்கு உட்பட்ட ஒரு பெண் கர்ப்பம் அடைவதையே வளரிளம் பருவ கர்ப்பம் என்கிறோம். ஒரு பெண்ணிற்கு 21 வயதில் தான் உடல் முழு வளர்ச்சி பெற்று தாய்மையை ஏற்கத் தயாராகிறது. ஆனால் 18 வயது பூர்த்தி அடையாத பெண்ணிற்கும் 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் இடையே நடைபெறும் திருமணம், வறுமை, இடம்பெயரும் குடும்ப சூழ்நிலைகள், வீட்டின் மூத்தோர்கள் உடல் நலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் இளம்வயதில் குழந்தைகளுக்கு திருணம் செய்வது, சொத்து ரீதியான காரணங்கள், பள்ளி இடைநின்ற குழந்தைகள், வளரிலம் பருவங்களில் காதல் வயப்படுதல் போன்ற காரணங்களால் வளரிளம் பருவ கர்ப்பம் ஏற்படுகிறது. இதனால் தாய்மார்களுக்கு ரத்த சோகை, கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம், பிரசவத்திற்கு பிறகு ரத்தப்போக்கு, குறைமாத பிரசவம், ஊட்டச்சத்து குறைபாடு, கற்பகால சிக்கல்கள், மகப்பேறு மரணங்கள், மன நலம் பாதிப்பு, அரசின் உதவிகள் பெறமுடியாத நிலை என்று தாய்மாHகள் கடுமையாக பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர் இதேபோல் குழந்தைகளுக்கு எடை குறைவு, வளர்ச்சி குறைவு, சிசு மரணம், ஊட்டச்சத்து குறைபாடு, அடிக்கடி நோய்வாய்படுதல், கல்வித்திறன் மற்றும் பல்வேறு திறன்கள் பாதிக்கப்படுகிறது. ஆகவே நாம் அனைவரும் விழிப்பாக இருந்து குழந்தை திருமணங்களை தடுக்க முன்வர வேண்டும். இதேபோல் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், துஷ்பிரயோகம் அல்லது புறக்கணிப்புகளை சந்திக்கும் போதும், குழந்தைகள் ஆதரவு இல்லாமல் சுற்றித் திரியும்போது நாம் அதனை தடுக்க வேண்டும். இதற்கு 1098 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் அளிக்க வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வுகளை பாடல்கள், நடனம், நாடகம், பறையாட்டம் போன்ற கலைகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் மகேஸ்வரன், குணசேகரன், கடவூர் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ராஜேந்திரன், பழனியப்பன், சின்னச்சாமி, போண்டாராஜா, வேல்முருகன், ஆனந்த், அபு உள்பட வடசேரி கலைச்சுடர் மணி விருது பெற்ற சின்னத்துரை நாட்டுப்புற தெம்மாங்கு கோலாட்ட கலைக்குழு கலைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.