பாலமேடு ஜல்லிக்கட்டு :அமைச்சர் ஆய்வு.
மதுரை பாலமேட்டில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்
மதுரை மாவட்டம் பாலமேட்டில் வரும் 15ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது இப்போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்று (ஜன.10) வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், மதுரை மாநகராட்சி ஆணையாளர், சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் உள்ளிட்ட பலர் ஆய்வின்போது இருந்தனர்