இலக்கியம்பட்டி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

இலக்கியம்பட்டி அருள்மிகு கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் இன்று தரிசனம் செய்த பக்தர்கள்

Update: 2025-01-10 02:45 GMT
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் அதிகாலை 4:30 மணியளவில் திறக்கப்பட்டது. இதனை அடுத்து இலக்கியம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கல்யாண வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் ஒரு வார காலமாக சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு சிறப்பு உழவாரப் பணிகள் நடைபெற்றது மேலும் நள்ளிரவு முதலே சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். பின்னர் 4:30 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதிகாலை நேரத்தில் திடீரென பெருமாள் கோவிலில் சாரல் மழை பொழிந்தது அதனை பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நெடும் வரிசையில் நின்று பகத்தார்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News