பாலதண்டாயுதபாணி கோவிலில் இருந்து பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரை
நுற்றுக்கும் மேற்பட்டோர் நடைபயணம்
சேலம் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள பழனிமலை பாதயாத்திரை நண்பர்கள் குழு சார்பில் தைப்பூசத்தையொட்டி 10-ம் ஆணடு பழனிக்கு பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பள்ளப்பட்டி ராஜரிஷி ஆசிரமத்தில் அமைந்து உள்ள சேலம் ஸ்ரீபழனி பாலதண்டாயுதபாணி கோவிலில் தொடங்கிய பாதயாத்திரையை ராஜரிஷி ஆசிரம நிர்வாகி பாபு தொடங்கி வைத்தார். முன்னதாக கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் 200-க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் முருகன், வள்ளி, தெய்வானை வேடம் அணிந்து காவடி எடுத்து பாதயாத்திரையாக பழனிக்கு புறப்பட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சுப்பிரமணி, வாசுகி, வசியா, சுதன், சரவணன், யோகி ஆகியோர் செய்திருந்தனர்.