சமத்துவ பொங்கல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

சமத்துவ பொங்கல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Update: 2025-01-10 08:47 GMT
இரண்டு சக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் நல சங்கம் மதுராந்தகம் வட்டாரம் சார்பாக சமத்துவ பொங்கல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் வட்டார இரண்டு சக்கர வாகன பழுது நீக்குவோர் நல சங்கம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த சமத்துவ பொங்கல் விழாவில் சங்கத்தில் உறுப்பினராக உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளுக்கு சால்வை அணிவித்து கல்வி ஊக்கத்தொகை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு 21 வகையான பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் நல திட்ட உதவிகளள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநிலத் துணைத் செயலாளர் சுந்தர், சங்கத் தலைவர் சரவணன், உள்ளிட்ட மதுராந்தகம்,போரூர் மற்றும் சென்னை சுற்றுவட்டார சங்கத்தின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News