படப்பையில் மேம்பால பணி மந்தம் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

படப்பையில் ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரி அதிமுக போராட்டம் அறிவிப்பு

Update: 2025-01-10 13:40 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையை பயன்படுத்தி, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில், படப்பை பஜார் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 26.64 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி, 2022 ஜனவரியில் துவங்கி, தற்போது வரை மந்தகதியில் நடக்கிறது. பாலம் கட்டுமான பணிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டதால், சாலை குறுகலாகி உள்ளது. இதனால், வழக்கத்தை விட இரு மடங்கு போக்குவரத்து நெரிசலும், அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. மூன்று ஆண்டுகளாக மந்தகதியில் நடக்கும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், படப்பையில் ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட இடங்களில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் படப்பையில் நடைபெறுகிறது.

Similar News