புலியூர் அருகே பயங்கர ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தார் நபர் கைது.
புலியூர் அருகே பயங்கர ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தார் நபர் கைது.
புலியூர் அருகே பயங்கர ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தார் நபர் கைது. கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புலியூர் முடக்கு சாலையில் DSP செல்வராஜ் தலைமையில் வாகன தணிக்கையில் நேற்று மாலை ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை இட்டபோது, அந்த காரில் புலியூர் அருகே உள்ள பி.வெள்ளாளப்பட்டியை சேர்ந்த பெரியசாமி மகன் ரவிச்சந்திரன் வயது 50 என்பவர் தெரிய வந்தது. காரில் பட்டாகத்தி ஒன்றை மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்த காவல்துறையினர், பிறகு ரவிச்சந்திரனை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று சோதனை இட்டபோது,அவரது வீட்டில் 1-பட்டாக்கத்தி ,4- சூரிக்கத்தி,1- வீச்சருவாள்,1- நாட்டுத் துப்பாக்கி,1- மான் கொம்பு மற்றும் செய்திக்கனல் பத்திரிகை நிருபர் என ஒரு அடையாள அட்டை, நல வாரிய அடையாள அட்டை, பேட்ச் போன்றவற்றை பதுக்கி வைத்திருந்ததை அறிந்து அவை அனைத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் ஓட்டி வந்த காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் மீது ஏற்கனவே கரூர், மதுரை ,திருச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. மேலும், அவர் மீது வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் காவல்துறையினர்.