பழையபாளையம் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் ஜனவரி மாத முதல் சனி பிரதோஷம் சிறப்பு பூஜை!

இந்த வருடத்தின் முதல் சனி பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2025-01-11 14:48 GMT
ஒவ்வொரு மாதமும் வரும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் சிவன் கோவில்களுக்கு சென்று நந்தியம்பெருமான் மற்றும் சிவதரிசனம் செய்வது வழக்கம்.அந்த வகையில், இந்த வருடத்தின் முதல் சனி பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி நாமக்கல் மாவட்டம்,சேந்தமங்கலம் வட்டம், S.பழையபாளையம் அருள்மிகு ஸ்ரீ பார்வதி அம்பிகை உடனுறை நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் ஜனவரி மாத பிரதோஷத்தை முன்னிட்டு 21 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நந்தி மற்றும் லிங்கத்திற்கு பால், இளநீர் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் வில்வ இலை, பூ, விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News