உடுமலை ஆர் கே ஆர் கிரிக்ஸ் பள்ளியில் பொங்கல் விழா உற்சாகம்

திரைப்படப் புகழ் மக்கள் இசை கலைஞர்கள் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி பங்கேற்பு

Update: 2025-01-11 17:26 GMT
உடுமலை ஆர்.கே.ஆர் கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா இன்று நடைபெற்றது.விழாவில் கோவை முதன்மை வருமானவரி ஆணையர் ரங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.உடுமலை ஆர்.கே.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.கே.ராமசாமி தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். செயலர் ஆர்.கே.ஆர் கார்த்திக்குமார் முன்னிலை வகித்தார். அதைத் தொடர்ந்து உழவர்களின் சிறப்பையும், உழவுக்கு உதவும் மாடுகளின் மகத்துவத்தையும் உணர்த்தும் வகையில் விழா நடைபெற்றது.மேலும் தமிழர்களின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றும் விதமாக பவளக்கொடி குழுவினரின் கும்மியாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், தேவராட்டம், காவடியாட்டம், புலி ஆட்டம், உருமியாட்டம், கோல்கால் ஆட்டம், கரகாட்டம். சிலம்பம். களரி உறியடித்தல், பம்பரம் விடுதல், கயிறு இழுத்தல், ரங்கராட்டினம், செங்கல் நடை விளையாட்டு, சைக்கிள் மெது ஓட்டம், சாக்கு ஓட்டம், டயர். நுங்கு வண்டி ஒட்டுதல், கும்மியடித்தல், பூப்பறிக்க வருதல், முறுக்கு கடித்தல் போன்ற விளையாட்டுக்கள் நடை பெற்றன.அத்துடன் பழமை பொருட்கள், சிறுதானியக் கண்காட்சி மற்றும் மறத்தமிழர்களின் தற்காப்பு ஆயுதக் கண்காட்சியும் காட்சிப் படுத்தப்பட்டது.மேலும் சூரியப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என மூன்று விழாவும்,சூரியனுக்கும், ஏழு சப்த கன்னிகளுக்கும் படையலிட்டு மக்களின் வாழ்க்கை செழிக்கும் வகையில் வழிபாடு நடைபெற்றது குறிப்பாக மக்களின் திரைப்படப் புகழ் மக்களை செந்தில் கணேஷ் ராஜலட்சுமி அவர்களின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.விழாவை ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர்களையும், விழாவில் கலந்து கொண்ட மாணவர்களையும் உடுமலை ஆர்.கே.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.கே.ராமசாமி,செயலர் ஆர். கே.ஆர்.கார்த்திக்குமார், ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.நிறைவாக பள்ளி முதல்வர்  டி.மாலா நன்றியுரை கூறினார்.

Similar News