உடுமலை ஆர்ஜி எம் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

பல்வேறு நாட்டுப்புற கலைகள் ஆடி மாணவர்கள் உற்சாகம்

Update: 2025-01-11 17:30 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆர் ஜி எம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமத்துவ பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது பள்ளியின் தாளாளர் ரவீந்திரன் கெங்குசாமி தலைமையில் பொங்கல் வைக்கப்பட்டு உழவர்களுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் தமிழர்கள் பண்பாட்டுத் திருவிழா தொடங்கியது விழாவில் பள்ளி கும்மியாட்டம் தேவராட்டம் கும்மி நடனம் உரியடித்தல் வில்லுப்பாட்டு ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய பண்பாட்டு நிகழ்வுகளுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது மேலும் 50க்கும் மேற்பட்ட சமத்துவ பொங்கல் வைக்கப்பட்ட நிலையில் பள்ளியின் தாளாளர் பொங்கல் வைத்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தாளாளர் ரவீந்திரன் கெங்குசாமி பரிசுகள் வழங்கினார் பள்ளியின் செயலாளர் திருமதி நந்தினி ரவீந்திரன் முதல்வர் சகுந்தலா மணி மக்கள் தொடர்பு அதிகாரி கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Similar News