கழிவு வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்கள்

குலசேகரம்

Update: 2025-01-11 11:59 GMT
குமரி மாவட்டத்தில் இயங்கும் சில பன்றி பண்ணைகளுக்கு கேரள மாநிலத்தில் இருந்து வாகனங்களில் இறைச்சி கழிவுகள் கொண்டு வரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கேரளமாநிலத்தில் இருந்து கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை பிடிப்பதற்காக குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.         இந்த நிலையில் கேரளாவில் இருந்து ஹோட்டல் கழிவுகளை ஏற்றிக்கொண்டு இன்று 11-ம் தேதி காலை குலசேகரம் அருகே வாகனம்  வந்தது.  வாகனத்தில் இருந்து தூர் நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அந்த வாகனத்தை சிறைபிடித்தனர். பின்னர் குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் ஓட்டுனரை பிடித்து விசாரணை நடத்தியபோது குலசேகரம் அருகே சிறைக்குளத்தன்கரை பகுதியில் செயல்படும் பன்றி பண்ணைக்கு கழிவுகள் கொண்டுவந்தது தெரியவந்தது.  இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News