வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அயல் நாட்டவர் பங்கேற்பு.

வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அயல் நாட்டவர் பங்கேற்பு..

Update: 2025-01-11 12:34 GMT
வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அயல் நாட்டவர் பங்கேற்பு. கரூர்-திண்டுக்கல் சாலையில் புத்தம்பூரில் செயல்படும் வள்ளுவர் கலை அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி வளாகத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா கல்லூரியின் தாளாளர் செங்குட்டுவன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வந்த அயர்லாந்தை சேர்ந்த டாக்டர் சீமஸ் ஓ டுமா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேக். ரெய்ன்ஹார்ட் நோபவுர், ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர்.ஷாலினி சிங் ஆகியோர் சமத்துவ பொங்கல் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். அவர்களுக்கு கல்லூரியின் தாளாளர் செங்குட்டுவன் தமிழ் பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து வரவேற்றார். கல்லூரி வளாகத்தில் புது பானையில் பொங்கல் தயாரிக்கும் பணியில் கல்லூரி மாணவ மாணவியர் ஈடுபட்டனர். இதனைக் கண்ட வெளிநாட்டவர்களுக்கு பொங்கல் விழாவின் சிறப்பையும் அதன் மாண்பையும் கல்லூரி சார்பாக எடுத்துரைத்தனர். பிறகு அவர்களும் பொங்கல் பானையில் பொங்கல் பொங்கி வரும் அழகை கண்டு ரசித்தனர். பின்னர் கல்லூரி மாணவ-மாணவியர் பல்வேறு தமிழ் திரைப்பட பாடலுக்கு ஏற்றவாறு நடன அசைவுகளை அமைத்து நடனமாடி மகிழ்ந்தனர். மேலும், பாரம்பரிய கிராம பாடல்களை இசைத்து ஆடி பாடிய அழகை வெளிநாட்டவர் வெகுவாக ரசித்தனர்.

Similar News