மருத்துவ கல்லூரியில் பொங்கல் விழா
மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் அமைந்துள்ள வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இன்று (ஜன.11) பொங்கல் தின விழா கொண்டாடப்பட்டது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள், செவிலியர் மாணவிகள் மற்றும் வேலம்மாள் பள்ளி மாணவ மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றினைத்து கொண்டாடிய "கிராமிய பொங்கல் விழாவில் செங்கரும்பு சூழ கல் அடுப்பில் பித்தாளை பானை மினுமினுக்க பச்சரிசி பொங்கல் வைத்து கொண்டாடினர். விழாவில் தமிழர்களின் வீர விளையாட்டுகளான ஜல்லிக்கட்டை போற்றும் வகையில் மைதானத்தில் வளம் வந்த ஜல்லிக்கட்டு காளைகள், வாடிவாசல் பல்வேறு உள்பட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன, அதேபோல ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவிகள் பட்டு சேலை அணிந்து பொங்கல் பாடல்கள் பாடி கும்மியடித்து பொங்கல் விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பொங்கல் விழாவினை வேலம்மாள் கல்லூரி அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.துணைத் தலைவர் விக்னேஷ் ,முதன்மை நிர்வாக அலுவலர் மணிவண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.