ஊத்தங்கரை: தனியார் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
ஊத்தங்கரை: தனியார் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி. திருமால் முருகன் கலந்து கொண்டு பூஜை செய்து விழாவை துவக்கி வைத்தார். மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடைகளை அணிந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர். மாணவர்களுக்கு பொங்கல், இனிப்பு வழங்கப் பட்டது.