திண்டிவனத்தில் ரயில் மோதி இறந்தவர் குறித்து போலீசார் விசாரணை

ரயில் மோதி இறந்தவர் குறித்து போலீசார் விசாரணை

Update: 2025-01-12 04:05 GMT
திண்டிவனம் ரயில் நிலையம் அருகே நேற்று அதிகாலை விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் கடந்துள்ளது. அப்போது மேம்பாலத்தின்கீழ் பகுதியில் குடித்துவிட்டு, போதை மயக்கத்தில்இருந்த ஒருவர் தண்டாவளத்தை கடக்க முயன்றார்.அப்போது ரயில்நிலையத்தில் நிற்காமல் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இறந்தவர் அவர் யார் எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை.செங்கல்பட்டு ரயில்வே போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

தீ விபத்து