ஏணியில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
பொங்கல் பண்டிகையொட்டி வீட்டை சுத்தம் செய்த போது ஏணியில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு காவலர்கள் விசாரணை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் வட்டம் மொட்டலூர் ஊராட்சி, கொட்டாவுரை சேர்ந்த முருகேசன் என்பவரின் மனைவி விசுமதி பொங்கல் பண்டிகையொட்டி வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது ஏணியில் இருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளார் அவரை மீட்டு அவரது குடும்பத்தார் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர் மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் விசுமதி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த காரியமங்கலம் காவலர்கள் இன்று இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.