அருமைடா கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா
பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் விழா கொண்டாட்டம்
பெரம்பலூர் டவுண் லயன்ஸ் சங்கம் மற்றும் சிவம் டிரேடர்ஸ் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா அருமடல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.விழாவில் சாசனத் தலைவர் MJF Lion சிவசண்முகம் முன்னிலை வகிக்க,தலைவர் G.விக்னேஷ்வர் தலைமையில் ஆசிரியர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் பங்குபெற்று பொங்கலிட்டு இயற்கைக்கு நன்றி கூறி மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.தமிழர் மரபுக்கலைகளான சிலம்பம்,சடுகுடு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டவுண் லயன்ஸ் சங்கம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.முன்னதாக நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் K.பாலமுருகன் வரவற்புரை ஆற்றினார். பெரம்பலூர் டவுண் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.ஆசிரியர் து.சாந்தி நன்றியுரையாற்றினார்.