பொங்கல் பரிசு தொகை குறைபாடு குறித்து ஆட்சியரிடம் புகார்

பொங்கல் பரிசு தொகை குறைபாடு குறித்து ஆட்சியரிடம் புகார்;

Update: 2025-01-14 14:46 GMT
பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் சீனி மற்றும் அரிசியின் எடை அளவு குறைவாக இருந்ததை கேட்ட நபரின் மீது காவல்துறையில் அதிகாரிகள் புகார் அளித்திருப்பதாகவும் இதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மனு அளித்த முதியவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே படிக்காசு வைத்தான் பட்டியை சார்ந்தவர் கர்ணன் இவர் உழவர் பெருந்தலைவர் ஐயா நாராயணசாமி நாயுடு தமிழக விவசாயிகள் நலச் சங்கத்தின் மாவட்ட செயலாளராக உள்ளார் தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு வாங்குவதற்கு இவருடைய மனைவி அருகே உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் நியாய விலை கடை எண் ஒன்றில் சென்று அவருடைய மனைவி பொங்கல் தொகுப்பு பரிசை வாங்கி வந்ததாகவும் வாங்கி வந்து அதன் பொருட்களின் எடையை சரிபார்த்த பொழுது ஒரு கிலோ அரிசிக்கு பதிலாக 950 கிராம் அரிசியும் ஒரு கிலோ சீனிக்கு பதிலாக 950 கிராமம் இருந்ததாகவும் இது குறித்து கர்ணன் தொலைபேசி மூலமாக படிக்காசு வைத்தான் பட்டியின் நியாயவிலைக் கடை செயலர் உரிய பதில் இல்லாத காரணத்தினால் அதைத் தொடர்ந்து தொலைபேசி மூலம் மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரியிடம் இது குறித்து கேட்டதாகவும் கூறப்படுகிறது அதற்கு இதற்குரிய நடவடிக்கை எடுக்காமல் வருவாய் ஆய்வாளர் மூலம் கர்ணன் மீது பொய் புகார் அளித்திருப்பதாகவும் வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் அதிகாரிகள் புகார் அளித்திருப்பதாகவும் தான் எந்த தவறும் செய்யாமல் புகார் அளித்ததற்குக்கான காரணத்தை அவர்கள் அளிக்க வேண்டும் அரசு வழங்கும் பொருட்களை உரிய அளவில் பொதுமக்களுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் நியாயவிலைக் கடையில் பெற்ற பொங்கல் தொகுப்புடன் கர்ணன் மனு அளித்தார் பேட்டி கர்ணன்

Similar News