விருதுநகரில் காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் - ஜாதிமதம் பாராமல் அனைத்து மதத்தினரும் பங்கேற்பு...*
விருதுநகரில் காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் - ஜாதிமதம் பாராமல் அனைத்து மதத்தினரும் பங்கேற்பு...*
விருதுநகர் விருதுநகரில் காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் - ஜாதிமதம் பாராமல் அனைத்து மதத்தினரும் பங்கேற்பு... விருதுநகர் மேற்கு காவல் நிலையம் சார்பில் காவல் ஆய்வாளர் நம்பிராஜன் தலைமையில் இன்று தைத்திருநாளை முன்னிட்டு விருதுநகர் தேசபந்து மைதானத்தில் வைத்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் இந்து, முஸ்லீம் , கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் ஜாதி மதம் பாராமல் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். சிறப்பு அழைப்பாளராக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோகன் கலந்து கொண்டார். மேலும் சமத்துவ பொங்கலை வைத்து முடித்தவுடன் பொங்கலுக்கு ஆராதனை காட்டி இறைவனை வழிபட்டு பொங்கலை பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கினர். ஜாதி மதம் பாராமல் அனைத்து மதத்தினரும் ஒன்றினைந்து பொங்கலை பொதுமக்களுக்கு வழங்கினர். இந்த நிகழ்வு பொதுமக்களிடையே மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பொங்கல் நிகழ்ச்சியில் விருதுநகர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் செல் டிரஸ்ட் உறுப்பினருமான ஆர்.வி. மகேந்திரன், விருதுநகர் வியாபாரிகள் சங்கம் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்