நாமக்கல் மைய நூலகத்தில் மக்கள் சிந்தனை அரங்கம்..!

தமிழாசிரியர் செந்தில்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, புத்தகம் பேசுகிறது என்ற தலைப்பில், ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் எழுதிய "மாபெரும் சபைதனிலே...." என்ற புத்தகம் குறித்து பேசினார்.;

Update: 2025-01-30 14:50 GMT
நாமக்கல் மைய நூலகத்தில் மக்கள் சிந்தனை அரங்கம்..!
  • whatsapp icon
நாமக்கல் மாவட்ட மைய நூலகம், நாமக்கல் போட்டித் தேர்வு நூலகம் மற்றும் மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் மக்கள் சிந்தனை அரங்கம் நடைபெற்றது. மைய நூலக வாசகர் வட்ட தலைவர் தில்லை சிவகுமார் தலைமை வகித்தார்.மைய நூலக நூலகர் நாகராஜன் வரவேற்றார். நல்லாசிரியர் விருதுபெற்ற, சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் செந்தில்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, புத்தகம் பேசுகிறது என்ற தலைப்பில், ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் எழுதிய, மாபெரும் சபைதனிலே.... என்ற புத்தகம் குறித்து பேசினார். சிறப்பு விருந்தினர்களாக போட்டி தேர்வு நூலகர் ஜோதிமணி, கவிஞர் இல்ல நூலகர் செல்வம், நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவை தலைவர் மோகன், கவிஞர் சேந்தை செழியன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பேசினார்கள். முடிவில் மைய நூலக வாசகர் வட்ட துணைத் தலைவர் கலை இளங்கோ நன்றி கூறினார்.

Similar News