போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமைந்துள்ள கலர் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவ மாணவியர் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.;
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசினர் கலை அறிவியல் கல்லூரியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் போதை பொருட்கள் பயன்படுத்துதல் மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியானது மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசினர் கலை அறிவியல் கல்லூரியில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நிறைவடைந்தது.