நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு..

முதல்வரின் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் மன்னார்குடி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முகாமிட்டு அரசின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அதன் ஒரு பகுதியாக கீழனாகை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.;

Update: 2025-02-20 18:00 GMT
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மன்னார்குடி பகுதியில் முகாமிட்டு கள ஆய்வினை மேற்கொண்டார். மன்னார்குடி வட்டம் நெடுவாக்கோட்டை ஊராட்சி கீழனாகை கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தையும் அதனைத் தொடர்ந்து மேலனாகி கிராமத்தில் பருத்தி மற்றும் கத்தரிக்காய் ஆகியவற்றை சொட்டுநீர் சாகுபடி மூலம் நடவு செய்யப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்..

Similar News