தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை மகப்பேறு அவசர சிகிச்சை பகுதியில் சிசு நல நோய் தொற்று சிகிச்சை பிரிவு துவக்கம்
மருத்துவம்;
தஞ்சாவூர் அரசு இராசாமிராசுதார் அரசு மருத்துவமனை மகப்பேறு அவசர சிகிச்சைப் பகுதியில் சிசு நல நோய் தொற்று சிகிச்சை பிரிவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் வியாழக்கிழமை திறந்து வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது. "தஞ்சாவூர் அரசு இராசாமிராசுதார் அரசு மருத்துவமனை மகப்பேறு அவசர சிகிச்சை பிரிவில் நோய்த்தொற்று உள்ள குழந்தைகளுக்கு புதிதாக குழந்தைகள் நல நோய் தொற்று சிகிச்சை பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் நோய்த் தொற்றுள்ள 8 குழந்தைகளுக்கு தனி அறையில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் நல்ல நிலையில் உள்ள குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க முடியும்" என்றார். இந்நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி மருந்துவமனை முதல்வர் மரு.பாலாஜிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.