முதியவர் தற்கொலை

பெருந்துறை அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை;

Update: 2025-02-01 02:56 GMT
ஈரோடு மாவட்டம், பெருந்துறை, செந்தில்வேல் நகரை சேர்ந்தவர் அழகர் (54). இவர்,பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.இவரது தந்தை ஆனந்தன் (83). இவர் தனது மகன் அழகருடன் வசித்து வந்தார். ஆனந்தனுக்கு இதய பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகள் இருந்து வந்துள்ளது. அதற்காக சிகிச்சை பெற்றும் வந்துள்ளார். இருப்பினும், நோய்கள் பாதிப்பு காரணமாக மனமுடைந்த நிலையில் இருந்த ஆனந்தன் கடந்த 27ம் தேதி, வீட்டில் வைத்திருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்துவிட்டார். இதையறிந்த அழகர் உடனடியாக அவரை மீட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆனந்தன், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News