சவேரியார் தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு வழிபாடு
கோவிலூர் புனித சவேரியார் தேவாலயத்தில் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் கைகளில் மெழுகுதிரிகளை ஏந்தி சிறப்பு வழிபாடு;
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட கோவிலூரில் அமைந்துள்ள புனித சவேரியார் தேவாலயத்தில் இன்று பிப்ரவரி 02 அருட்தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவை காணிக்கையாக இன்று ஒப்புக்கொடுத்த நிகழ்வை முன்னிட்டு கைகளில் மெழுகு திரிகளை ஏந்தி தேவாலயத்தை சுற்றி வலம் வந்தனர் பின்னர் அருட்தந்தையை ஆரத்தி எடுத்து திருப்பலி நடத்த வரவேற்றனர். மேலும் இன்று அன்பியங்கள் நாள் விழா கொண்டாடப்பட்டது கோவிலூர் பங்கில் உள்ள 11 அன்பியங்கள் சார்பிலும் திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டது இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏரளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பங்கு பெற்றனர்.