மக்கள் நீதி மன்றத்தில் 590 வழக்குகள் சமரச தீர்வு
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 590 வழக்குகளுக்கு ரூ.2.50 கோடி மதிப்புக்கு சமரச தீர்வு:-;
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 590 வழக்குகளுக்கு ரூ.2.50 கோடி மதிப்புக்கு சமரச தீர்வு காணப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி தலைமையிலும், மயிலாடுதுறை வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், முதன்மை சார்பு நீதிபதி சுதா முன்னிலையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து நீதிமன்றங்களிலிருந்தும் சிவில் வழக்குகள், சமரசத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடிய குற்ற வழக்குகள், அசல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து கோரிக்கை தீர்ப்பாயம் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், நில ஆர்ஜித அசல் மனுக்கள், நிறைவேற்றும் மனுக்கள், சுருக்கு விசாரணை வழக்குகள், மனுக்கள் ஆகிய 590 வழக்குகளுக்கு ரூ.2.50 கோடி மதிப்புக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் மூலமாக சமரச தீர்வு வழங்கப்பட்டது. இதில், அனைத்து வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகள் கலந்து கொண்டனர்.