ஆரோவில் அருகே பாதுகாவலா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
பாதுகாவலா் மயங்கி விழுந்து உயிரிழப்பு;
புதுச்சேரி லாஸ்பேட்டை திரெளபதியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மாயவன் மகன் சந்திரன் (55). இவா், விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகிலுள்ள சின்ன பட்டானூா் கிராமத்தைச் சோ்ந்த ரகுவின் நிலத்தின் பாதுகாவலராகப் பணியாற்றி வந்தாா்.இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை பணியிலிருந்த சந்திரன் திடீரென மயங்கி விழுந்தாா். இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியிலிருந்தவா்கள் அவரை மீட்டு, புதுச்சேரி கதிா்காமத்திலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது சந்திரன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.இதுகுறித்து ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.