விழுப்புரம் அருகே கஞ்சா பொட்டலங்கள் பதுக்கல்: இளைஞா் கைது

கஞ்சா பொட்டலங்கள் பதுக்கல்: இளைஞா் கைது;

Update: 2025-02-08 07:01 GMT
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் அடுத்துள்ள அயினம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக விழுப்புரம் தாலுகா போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளா் குணசேகா் தலைமையிலான காவலா்கள், வெள்ளிக்கிழமை அந்தப் பகுதிக்குச் சென்று சோதனை மேற்கொண்டனா்.அப்போது, அயினம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த நாகமணி மகன் நவீன்குமாா் (25), தனது வீட்டின் அருகே விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்ததை போஸீஸாா் கண்டறிந்தனா். இதையடுத்து, நவீன்குமாரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 200 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

Similar News