கோட்டக்குப்பம் அருகே கடலில் மூழ்கி வெளி மாநில இளைஞா் உயிரிழப்பு
கடலில் மூழ்கி வெளி மாநில இளைஞா் உயிரிழப்பு;
கா்நாடக மாநிலம், பெங்களூரு ராஜிகுட்டா, ஜே.பி.நகா், விவேகானந்தா் காலனியைச் சோ்ந்தவா் ஹரிஷ் மகன் அரிகிருஷ்ணன் (26). பெயிண்டரான இவா், தனது நண்பா்கள் 5 பேருடன் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றாா்.கடந்த பிப்.7-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் கடற்கரையில் நண்பா்களுடன் குளித்தபோது அரிக்கிருஷ்ணன் கடல் அலையில் சிக்கி மாயமானாா்.இந்த நிலையில், கோட்டக்குப்பம் அடுத்த தந்திராயன்குப்பம் கடற்கரையில் அரிகிருஷ்ணனின் சடலம் கரை ஒதுங்கியிருந்து சனிக்கிழமை தெரியவந்தது. தகவலறிந்த போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.