மீனவர்களுக்கு மீன் வலை படகு வாங்க கடனுதவி அளிக்கப்படுவதாக கூறி மோசடி

மீனவர்களுக்கு மீன் வலை படகு வாங்க கடனுதவி அளிக்கப்படுவதாக கூறி மோசடி;

Update: 2025-02-11 08:55 GMT
தாட்கோ கடன் மூலம் மீனவர்களுக்கு படகு வலை வாங்குவதற்காக வழங்கப்பட்ட கடனில் நான்கு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டிய நபரை குடும்பத்தினருடன் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் பழவேற்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மீனவர்களுக்கு மீன் வலை படகு வாங்க கடனுதவி அளிக்கப்படுவதாக கூறி மோசடி திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு லைட் ஹவுஸ் குப்பம் பகுதியில் வசிக்கும் சுமார் 151 மீனவ கிராம மக்களுக்கு படகு மற்றும் மீன் வகைகள் வாங்குவதற்காக கடந்த 2024 ஆம் ஆண்டு பனப்பாக்கம் மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் நபர் ஒருவருக்கு ரெண்டு லட்சத்து 98 ஆயிரத்து 640 ரூபாய் கடன் உதவி வழங்கிய நிலையில் அதற்கு அரசு சார்பில் மானியமும் வழங்கியுள்ளனர் கூட்டுறவு வங்கி செயலாளர் திருப்பதி கடன் தொகை வழங்கியதில் லைட் ஹவுஸ் மீனவ குப்பத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உடன் சேர்ந்து கொண்டு சுமார் நான்கரை கோடி வரை மோசடி செய்துள்ளதாக அப்பகுதியை சேர்ந்த ராஜ் கமல் என்பவர் தான் ஏமாற்றப்பட்டதால் அதனை தட்டி கேட்டுள்ளார் இதனால் ஆத்திரம் அடைந்த கட்டப்பஞ்சாயத்து முக்கிய நிர்வாகிகள் ராஜ்கமல் குடும்பத்தினரை இந்த பிரச்சனையில் தலையிடக்கூடாது ஊர் மக்கள் முன்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறி அவரை அவரை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக கூறியதுடன் அவர் வசித்து வந்த வீட்டினை தாக்கி சேதப்படுத்தியுள்ளனர் இந்த நிலையில் அவரோடு தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு அபராதம் ஐம்பதாயிரம் ரூபாய் மற்றும் குடும்ப தலைக்கட்டுக்கு மதுபான பாட்டில் வழங்க வேண்டும் பொதுமக்கள் முன்னிலையில் 15 முறை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்ததால் ஊரை விட்டு வெளியேற்றப்பட்ட அவர் இது குறித்து திருப்பாலைவனம் காவல் நிலையம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் வரை முறையிட்டும் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாத நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு சென்று உரிய பாதுகாப்புடன் அவரை மீண்டும் ஊருக்குள் வசிப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் கட்டப்பஞ்சாயத்து செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் மாதம் அறிவுறுத்திய நிலையில் தற்போது வரை கடன் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுபட்டவர்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் தங்களை ஊருக்குள் அனுமதிக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்ட ராஜ்கமல் இதுகுறித்து அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கி பனப்பாக்கம் மற்றும் கோளூர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் வங்கி கடன் மற்றும் பல்வேறு கடன் உதவிகள் அளிப்பதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் உரிய விசாரணை மேற்கொண்டு முறைகேடுகளை தடுக்கவும் மீனவர்களை ஏமாற்றி மீன்வலை படகுகளுக்காக வழங்கப்பட்ட வங்கி கடனை ஏமாற்றிய நபர்கள் மீதும் கட்டப்பஞ்சாயத்தார்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Similar News