தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிர்ப்பு : சிஐடியு சாலை மறியல்
ராணிப்பேட்டை, டிச. 23 - மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்களை கண்டித்து சிஐடியு சார்பில் செவ்வாயன்று (டிச. 23) சிஐடியு மாவட்ட பொருளாளர் என். ரமேஷ் தலைமையில் முத்துக்கடை பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.;
தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிர்ப்பு : சிஐடியு சாலை மறியல் ராணிப்பேட்டை, டிச. 23 - மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்களை கண்டித்து சிஐடியு சார்பில் செவ்வாயன்று (டிச. 23) சிஐடியு மாவட்ட பொருளாளர் என். ரமேஷ் தலைமையில் முத்துக்கடை பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 44 தொழிலாளர் நலச் சட்டங்களை ரத்து செய்துவிட்டு, முதலாளிகளுக்கு சாதகமாக அவற்றை 4 சட்டத் தொகுப்புகளாகச் சுருக்கியுள்ள மோடி அரசின் நடவடிக்கையை கண்டித்து, சட்டத் திருத்தங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என முழக்கமிட்டனர். மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கைது தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தை மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கே. ஆறுமுக நயினார் விளக்கிப் பேசி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட செயலாளர் ஆ. தவராஜ், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எல்.சி. மணி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பி. ரகுபதி, பொ.தொ.ச தலைவர் என். காசிநாதன், ஆர். வெங்கடேசன், கட்டுமானம் மாவட்ட செயலாளர் த. ஞானமுருகன், உள்ளாட்சி கௌரவ தலைவர் எபிஎம். சீனிவாசன், ஆட்டோ மா. தலைவர் பாபு, செயலாளர் பி. மணி, வாலாஜா பொ.தொ.ச பொருளாளர் கே. குழந்தைவேலு, போக்குவரத்து மண்டல செயலாளர் கே. ரவிச்சந்திரன், மின்சாரம் மண்டல தலைவர் வி. காமராஜ், அங்கன்வாடி மாவட்ட பொருளாளர் மாலதி, சிபிஎம் வாலாஜா தாலுகா செயலாளர் ஆர். மணிகண்டன், லிக்காய் மாநில செயலாளர் தா. வெங்கடேசன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.