ஆவடி காவல் ஆணையரகத்தில் மெகா சைபர் விழிப்புணர்வு

ஆவடி காவல் ஆணையரகத்தில் மெகா சைபர் விழிப்புணர்வு;

Update: 2025-02-11 09:13 GMT
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் ஆணையரகத்தில் மெகா சைபர் விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ் தலைமையில் நடைபெற்றது இதில் ஆவடி காவல் இணை ஆணையர் புவனேஸ்வரி ஐபிஎஸ் துணை ஆணையர் பெருமாள் ஐ பி எஸ் கூடுதல் துணை ஆணையர் அர்னால்டு எஸ்தர் ஆகியோர் பங்கேற்றனர் இதில் பேசிய கூடுதல் ஆணையர் புவனேஸ்வரி ஐபிஎஸ் கல்லூரி மாணவர்களிடையே பேசுகையில் கடன் லோன் ஆப் டிஜிட்டல் அரெஸ்ட் வீட்டிலிருந்து வேலை போன்ற நூதன முறைகளில் சைபர் குற்றங்கள் நடந்து வருகின்றன ஏராளமான லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி பேர்வழிகள் ஏமாற்றி வருகின்றனர் இது குறித்த விழிப்புணர்வு சமூகத்திற்கு தேவை இளைஞர்களிடையே குறிப்பாக கல்லூரி மாணவ மாணவர்களிடையே விழிப்புணர்வு அவசியம் தேவைப்படுகிறது என்றால் பின்னர் பேசிய காவல் ஆணையர் சங்கர் வீட்டிலிருந்தே சைபர் குற்றத்தில் ஈடுபட்டு திருட்டை நடத்துகின்றனர் வங்கி எந்த அறிவிப்பையும் செய்யாது ஓடிபி கேட்காது வங்கி எண் கேட்காது பஞ்சாப் மகாராஷ்டிரா மேற்குவங்கம் போன்ற இடங்களில் இருந்து பணங்களின் நூதன முறையில் திருடி விடுகின்றனர் எனவே இவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எப்படிப்பட்ட சைபர் குற்றங்கள் நடைபெறுகின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் இதில் நாம் ஏமாறக்கூடாது மாதச் சம்பளம் வாங்குபவர்கள் ஓய்வூதியம் பெறுபவர்கள் தொழில் புரிபவர்கள் அரசு ஊழியர்கள் இப்படிப்பட்டவர்களை குறி வைத்து சைபர் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன இந்த விழிப்புணர்வை இளைஞர்கள் கல்லூரி மாணவ மாணவியர்கள் சமுதாயத்தில் உள்ள மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்

Similar News