காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு பிடியாணை
சிவகங்கை மகளிா் நீதிமன்றம் நாகப்பட்டினம் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது.;
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி காவல் நிலையத்தில் கடந்த 2012 -ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கு விசாரணை சிவகங்கை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், அப்போதைய காவல் ஆய்வாளராகப் பணியாற்றியவரும், தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவருமான சிங்காரவேலன், இந்த வழக்கு விசாரணைக்காக தொடா்ந்து மூன்று முறை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, சிவகங்கை மகளிா் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்து, வரும் 21-ஆம் தேதிக்குள் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த உத்தரவிட்டது.