மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள்

சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது;

Update: 2025-02-16 05:25 GMT
சிவகங்கை சிவம் மார்சில் ஆர்ட்ஸ், நேரு யுவகேந்திரா மற்றும் உலக பாரம்பரிய சிலம்பம் விளையாட்டு கலைச்சங்கம் இணைந்து நடத்தும் 35 வது மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிக்கு மாநில அளவில் 21 மாவட்டங்களில் இருந்து 1000 மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிக்கு உலக பாரம்பரிய சிலம்பம் விளையாட்டு கலைச்சங்கம் மாவட்ட செயலாளர் செந்தில் குமார் வரவேற்புரை வழங்கினார். தாய் சென்சாய் ராஜசேகரன் ஜப்பான் மற்றும் உலக பாரம்பரிய சிலம்பம் விளையாட்டு கலைச்சங்கம் டெக்னிக்கல் டைரக்டர் திரு ஷேக் இப்ராஹிம் சா தலைமையிலும் சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ் நிறுவனர் ரென்சி பரமசிவம் மற்றும், தமிழ்நாடு பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கலைச்சங்கம் தலைவர் அருண்பிரகாசம் மற்றும் நேரு யுகேந்திரா ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார், முன்னிலையிலும் சிவகங்கை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலைகதிரவன் மற்றும் பிரான்சிஸ் சேவியர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துரை வணங்கி போட்டியினை துவக்கி வைத்தனர் மேலும் சிவகங்கை சிவம் மார்ஷல் ஆர்ட்ஸ் தலைவர் சென்சாய் கோபி நன்றியுரை வழங்கினார். இப்போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு ஒற்றைக்கம்பு பிரிவில் வெற்றி கோப்பைகளும் மற்றும் சான்றிதழ்களும் இரட்டை கம்பு பிரிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

Similar News