தொகுப்பூதிய அடிப்படையில் கணினி இயக்குபவர் பணியிடம்

சிவகங்கை மாவட்டம், ஊராட்சி ஒன்றியங்களில் கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு, முற்றிலுமாக தற்காலிகம் மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில்  பணியாற்றிட விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது;

Update: 2025-02-16 14:00 GMT
சிவகங்கை மாவட்டம், ஊராட்சி ஒன்றியங்களில் காலியாகவுள்ள கணினி இயக்குபவர் (Computer Operator) பணியிடத்திற்கு, முற்றிலுமாக தற்காலிகம் மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில்  பணியாற்றிட சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த நபர்கள் தங்களது வசிப்பிட தாலுகாவிற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் மாதிரி விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்திடலாம் சிவகங்கை மாவட்டம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத்திட்டத்தின் கீழ், ஊராட்சி ஒன்றியங்களில் காலியாகவுள்ள கணினி இயக்குபவர் (Computer Operator) பணியிடத்தில், தகுதிகள் உள்ள நபர்களுக்கு முற்றிலும் தற்காலிக அடிப்படையிலும், ரூ.14000/- (ரூபாய் பதினான்காயிரம் மட்டும்) தொகுப்பூதிய அடிப்படையிலும், மாவட்டத்தில் உள்ள  ஊராட்சி ஒன்றியங்களில் தலா ஒன்று வீதம், மொத்தம் ஐந்து பணியிடங்கள்  நிரப்பப்படவுள்ளது.  மேலும், இப்பணியிடத்திற்கு சிவகங்கை  மாவட்டத்தை சார்ந்த நபர்கள் மட்டுமே  விண்ணப்பித்திடல் வேண்டும். மேலும், இப்பணியிடத்திற்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். கணினியில் MS Office அனுபவம் பெற்றவராகவும், கீழ்நிலை தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம்  ஆகியவைகளிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அதுமட்டுமன்றி, 01.03.2025 அன்று குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும்,  பொது வகுப்பினர் 30 வயதுக்கு மிகாமலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 வயதுக்கு மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அதிகபட்ச வயது 35 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மேலும், இதர வகுப்பைச் சேர்ந்த மாற்றுதிறனாளிகளுக்கு 10 ஆண்டு வயது வரம்பு சலுகை உண்டு. (குறிப்பு:  அரசாணை (நிலை) எண். 91, மனிதவள மேலாண்மைத் (எஸ்.)துறை, நாள் : 13.09.2021 ன்படி வயது உச்ச வரம்பு வரையறுக்கப்பட்ட வயதிலிருந்து 2 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, வரையறுக்கப்பட்ட வயதிலிருந்து 2 ஆண்டுகள் கூடுதலாக வயது விதித்தளர்வு உள்ளது) தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது வசிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள தாலுகாவிற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் மாதிரி விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து அதே ஊராட்சி ஒன்றியங்களில் விண்ணப்பங்களை வருகின்ற 17.02.2024 முதல் 24.02.2024 அன்று மாலை 5.45 மணிக்குள்  வழங்க வேண்டும். அதற்கு பின் காலதாமதமாகப் வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இதற்கு விண்ணப்பதாரர்களே பொறுப்பாவர்கள்.  எனவே,  மாவட்டத்தில் எந்த ஊராட்சி ஒன்றியத்தில் பணியிடம் வழங்கினாலும் பணிபுரிய  விருப்பமுள்ளவர்கள்,  மேற்கண்ட தேதி / நேரத்திற்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட  ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News