கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம், இராணியூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது.;
சிவகங்கை அருகே இராணியூா் இராணி அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களிலிருந்து 18 காளைகளும், 162 மாடு பிடி வீரா்களும் பங்கேற்றனா். ஒவ்வொரு காளையையும் 20 நிமிஷங்களில் 9 மாடுபிடி வீரா்கள் கொண்ட குழுவினா் அடக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் போட்டி தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசும், கேடயமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் மாடு முட்டியதில் 10 போ் காயமடைந்தனா். இப்போட்டியை உடவயல், சூரவத்தி, விசயமாணிக்கம், சாத்தணி, இலுப்பக்கோட்டை, குருக்கத்தி, பெரியகிளுவச்சி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கண்டுகளித்தனர்.